ஈரோடு மாவட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 4000 ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து நூல் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அவர்களைச் சார்ந்த கடைகளும் நேற்று அடைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் […]
