புதுச்சேரியில் பஞ்சு ஆலைகளை மூடும் அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சு ஆலைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் பஞ்சு ஆலைகளை இயக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.எஃப்.டி பஞ்சு ஆலையை முற்றிலும் மூட அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் […]
