நெல்லையில் பஞ்சாயத்து பெண் ஊழியரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள தரகன்காட்டில் அழகுராஜா மற்றும் அவருடைய மனைவி பாலசரஸ்வதி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலசரஸ்வதி திசையன்விளை பஞ்சாயத்து ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வமருதூர் பவுண்ட் தெருவில் வைத்து பாலசரஸ்வதி செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக 2 நபர்கள் சரஸ்வதியின் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
