பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவளம் பகுதியில் ஜெபமாலை-ஜாண் ப்ளோரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது. இதில் ஜாண் ப்ளோரா முன்னாள் பஞ்சாயத்து தலைவியாக இருந்துள்ளார். இவருடைய கணவர் ஜெபமாலை கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கியுள்ளார். இதனால் ஜாண் ப்ளோரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஜாண் ப்ளோரா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் […]
