விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்தில் கருணாநிதி(40) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடுப்புகுளத்தை சேர்ந்த தனுஷ்கோடி(62) என்பவருடன் நேற்று இரு சக்கர வாகனம் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் மதுரை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. […]
