வருசநாடு மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பஞ்சம்தாங்கி மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பலத்தகாற்று வீசியதால் மளமளவென தீ பரவி வருசநாடு வனப்பகுதியிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனையறிந்த வருசநாடு வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மலைப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், […]
