ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]
