ஜெயிலில் இருந்து வெளிவந்த சசிகலா கடந்த சில நாட்களாக தனது வாகனத்தில் அதிமுக கொடியை பறக்கவிட்டு பவனி வந்து கொண்டிருக்கிறார். மேலும் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் திறந்து வைத்தார். இது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் இணைந்து சசிகலா அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் இந்த இரண்டு நாள் பயணம் எடப்பாடியின் தரப்பினருக்கு சிறிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் உணர்ச்சிவசப்பட்டு […]
