முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]
