தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மார்ச் மாதம் 23-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை இளையான்குடி அருகே சிறப்பு வாய்ந்த தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் வருடந்தோறும் 10 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்ற வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில் விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் வருகின்ற 23-ஆம் தேதி விழா […]
