பங்குனி மாத பவுர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை […]
