தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகளை சீரமைப்பதற்காக கூடுதல் நிதி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையில் சாதுல்லா கான் மசூதி அமைந்துள்ளது. இங்கு செஞ்சியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன்பின் சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை […]
