திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் அஞ்சலகம் மற்றும் இ-தரிசன கவுண்டர் மூலம் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் சுப்ரபாதம், அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் […]
