தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு […]
