Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மந்தை முத்தாலம்மன் கோவில்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து சாமி சிலை செய்வதற்காக கொடுக்கப்பட்டது. அதன்பின் அந்த பிடி மண் சிறுகுடி மந்தை பகுதியில் உள்ள சவுக்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாத்தூர் கைலாசநாதர் கோவில்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட குடமுழுக்கு விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி கோமளாம்பிக்கை கோவில்… தீமிதி திருவிழா… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

மயிலாடுதுறை சீர்காழியில் கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காளியம்மன் எனும் கோமளாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து அலகு காவடிகள், பால்குடம் எடுத்து, கரகம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன், வானவேடிக்கையோடு ஊர்வலமாக தேர் வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், பிடாரி கீழவீதி, தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமை – பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. சென்னை தியாகராயநகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக அமைந்துள்ள பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி இன்று காலையில் சுப்ரபாதம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Categories

Tech |