பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் ஐயப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் புதுச்சேரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எஞ்சின் பழுதானதால் பேருந்து நடுவழியிலேயே நின்றது. இதனால் மாற்று பேருந்தில் ஏறி செல்லுமாறு […]
