நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . நாகப்பட்டினம் மாவட்த்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்த முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி பிறகு வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் கடலில் பொதுமக்கள் நீராட மாவட்ட […]
