தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் […]
