நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அமர்ந்து இலையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்குள்ள அன்னதான கூடங்களில் ஏழை எளியவர்களுக்கு மதிய நேரத்தில் இலையில் உணவு பரிமாறுவதை நிறுத்திவிட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரும்பாலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில் அன்னதானம் கூடங்களில் வைத்து பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லையப்பர் காந்தி […]
