பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியானது அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பஞ்சாப்பில் நடந்து வந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மானை, ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அவரது நம்பிக்கையை பூர்த்திசெய்யும் அடிப்படையில் பகவந்த் மான் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமருகிறார். […]
