பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து பஞ்சாப்பின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் சென்ற வாரம் தேர்தெடுக்கப்பட்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது பகத்சிங் பிறந்த ஊரான கட்கர்கலன் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நினைவு தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின் விடுதலை போராட்டத்திற்காக முக்கிய […]
