சிவாங்கி பாடி நடித்துள்ள நோ நோ நோ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் டான், நெஞ்சுக்கு நீதி, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு மாரோ, அடிபொலி போன்ற ஆல்பம் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் […]
