கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 105,921,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,309,188பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 77,551,577 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
