லெஜியோனேயர்ஸ் நோய் தொற்றால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா நாட்டின் வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கல் 4 பேர் லெஜியோனேயர்ஸ் நோயால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த லெஜியோனேயர்ஸ் நோய் என்பது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு நிமோனியா நோயாகும். இது முதல் முதலில் 1976-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் நடைபெற்ற படைவீரர் குழுவின் கூட்டத்தில் தோன்றியது. […]
