நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உருவாகியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமன்றி புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வசிப்பவர்களும் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருப்பதால் ஏழை எளிய மக்கள் விரும்பி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காலத்தில் புற நோயாளிகளின் வருகை குறைவாகவே இருந்தது. […]
