பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது தொடர்பாக ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் மற்றும் இன ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்படும் எந்தவொரு நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என்று ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவரான கோரன் ஹன்சன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “முக்கிய கண்டுபிடிப்பிற்காக மட்டுமே பரிசு அளிக்கப்பட வேண்டும். பாலினம் அல்லது இனத்திற்காக வழங்கப்படமாட்டாது. அதிலும் நோபல்பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டிலிருந்து இதுவரை 59 பெண்கள் மட்டுமே பெற்றுள்ளனர். […]
