கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேபாள நாட்டின் அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி. இவருடைய வயது 61ஆகிறது. இவர் உடல்நல குறைவால் காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இது குறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் […]
