திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் கடத்தி வந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து திருட்டுதனமாக தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரிகளில் உரிய ஆவணம் இன்றி ஆந்திராவிலிருந்து நெல் மூட்டைகளை […]
