கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில் போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் […]
