நெல்லையில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து மணிமுத்தாறு, குற்றாலம், செங்கோட்டை, பாபநாசம் மற்றும் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து மாலை நேரத்தில் திடீரென வானில் மேகங்கள் திரண்டது. அதன்பின் சிறிது […]
