கடந்த 2 தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக நிற்கும் நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் அனைத்தும் மழையால் சரிந்து கிடக்கிறது. மேலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
