நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]
