நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]
