“மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீப காலத்தில் பொதுமக்களுடன் உரையாடுகின்ற வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்கின்ற ஹாஷ் டாக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சமீபகாலத்தில் ட்விட்டரில் நெட்டிசன்கள் உடன் உரையாடி வந்துள்ளார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்து உள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் நான் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறலாம் என்று நினைக்கின்றேன். […]
