பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாகனி இல்லத்தில் நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார். தீபாவளி பண்டிகையின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
