கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை கனரக லாரி ஒன்று ஏற்றுக்கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லாரி நேற்று காலை உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் லாரியின் இடது பக்கம் முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரவுண்டானா வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் […]
