யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த […]
