எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது. […]
