நீலகிரி மாவட்டம் அருகே தேவால பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குடியிருப்புகள் அருகே வன விலங்குகள் விளை நிலங்களில் சேதப்படுத்துவது மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கம் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை கூடலூர் அருகே உள்ள தேவால பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று, […]
