Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அடித்து பிடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன. மேலும் அங்கு வசிக்கும் காட்டெருமைகள் ஜெயந்தி நகர், அன்னை நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் ஒரு காட்டெருமை அவாஹில் ராணுவ முகாம் பகுதியிலிருந்து நல்லப்பன் தெரு சாலையில் உலா வந்தது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்…. இங்கிலாந்து பெண்ணின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரட்டை குடியுரிமை உள்ளது. எனது முன்னோர்களின் பூர்வீக சொத்து கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நான் கடந்த 2014- ஆம் ஆண்டு கடலூரில் 2 ஏக்கர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருதலைக்காதல்…மாணவிக்கு கத்திக்குத்து…வாலிபரை மின்கம்பத்தில் கயிறால் கட்டி வைத்த பொதுமக்கள்… குன்னூரில் பரபரப்பு…!!!

ஒருதலைக்காதலால் வாலிபர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கீழ் பள்ளிவாசல் பகுதியில் வசித்த பூ வியாபாரி அப்பாஸ் என்பவருடைய மகன் ஆசிக் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்து விட்டார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடநாடு வழக்கு…. “துபாய்க்கு ஏன் போனீங்க”…. பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 6 மணி நேரம் விசாரணை…!!

கோடநாடு வழக்கு தொடர்பாக ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பர்னிச்சர் கடை உரிமையாளரிடம்  ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் வருடம் ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோடநாடு பங்களாவில் இருந்த பொருட்களும், முக்கிய ஆவணங்களும்  கொள்ளையடிக்கப்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிற்கு கடத்தப்பட்ட மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஜீவகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேரம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி கர்நாடக மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கர்நாடகாவிற்கு சென்று மாணவியை மீட்டனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புத்தகங்கள் படிப்பதன் அவசியம்…. சிறப்பாக வழங்கப்பட்ட அறிவுரை…!!!

மாணவர்களுக்கு புத்தக பயன் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம் பகுதியில் பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை மசினகுடியிலிருக்கும் நூலகத்திற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்கள் பல்வேறு புத்தகங்களை அமர்ந்து படித்தனர். அதன்பிறகு புத்தகத்தின் பயன் மற்றும் படிப்பதன் அவசியம் குறித்து  மாணவர்களுக்கு விளக்களிக்கப்பட்டது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“புஸ் புஸ் சத்தம்” அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!!

தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே லாரன்ஸ்டன் பகுதியில் அன்புராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்தனர்‌. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“65 வருடங்கள்” பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி…. புதர் செடிகள் அகற்றும் பணி தீவிரம்…!!!

பள்ளி வளாகத்தை சுற்றி இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 65 வருடங்கள் பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளாகத்தை சுற்றிலும் அடர்த்தியான புதர் செடிகள் உள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் பள்ளி வளாகத்தை சுற்றி அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கத்தி போடும் நிகழ்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் சிறுவர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்ட டயர்கள்…. மீட்கும் பணி தீவிரம்…!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சதுப்பு நிலத்தில் மாட்டிக்கொண்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேரூராட்சியில் தினந்தோறும் தூய்மைப் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரித்து லாரிகள் மூலமாக வளம் மீட்பு பூங்காவிற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் குப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி கான்கிரீட் சாலை வழியாக சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரமாக இருந்த சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் மாஸ் ஐடியா”…. மதுபானம் ரூ.10 உயர்வு… அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!!!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டிகள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையதளத்தில் வெளியான காணொலி காட்சி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் நீலகிரியில் புதுவகையான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மது பாட்டில்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“போட்டி அரசு நடத்துகிறார் ஆளுநர்”….. சிபிஐ மாநில செயலாளர் கருத்து…!!!!!!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாதம் “7,000 ரூபாய்” உதவித்தொடையுடன்…. தொழில் பழகுனர் பயிற்சி முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு தொழிற் பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் முன்னணி அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முத்துப்பல்லக்கு வீதி உலா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பல்லக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அம்மன் பல்லக்கில் வைத்து முக்கிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நலனுக்காக”…. ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!!

நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைககளுக்கு  சென்று பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் உள்ள படிவத்தினை பெற்று அதில் தங்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் மாற்று நபரின் விவரங்கள் குறித்து பூர்த்தி செய்ய வேண்டும். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்…. கோர விபத்தில் ஓட்டுநருக்கு படுகாயம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!

பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தட்டக்கொல்லி பகுதியில் யூசுப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் தொரப்பள்ளி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆட்டோ ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்…. திடீரென தாக்கிய காட்டுப்பன்றி…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!!

வனவிலங்கு தாக்கி பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஒன்னோரை கிராமத்தில் ரஜினி ஹரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் தேயிலை பறிக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல் தேயிலை பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி லட்சுமியை தாக்கியுள்ளது. இதில் லட்சுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள்” ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு….. உறுதியளித்த அதிகாரிகள்….!!

ஆதிவாசி கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே செவிடன்கொல்லி, புதுச்சேரி, அயினிப்புறா, நெல்லிப்புறா, தோட்டப்புறா, முள்ளன்வயல் போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வேண்டி மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையிலான ஒரு குழு ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற உரிமையாளர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்பலமூலா அருகே மணல்கொல்லி கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் ரவீந்திரன் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 10,500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பலமூலா காவல்நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானைகள்…. பீதியில் வாகன ஓட்டிகள்….!!!

காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இங்குள்ள கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பல கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில யானைகள் சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அதன்பிறகு யானைகள் சிறிது நேரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக”….. குப்பைகள் தூர்வாரும் பணி….. பொதுமக்களுக்கு வேண்டுகோள்…. !!!

சாலையோரமாக இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி-மேட்டுப்பாளையம் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் அரவேனு வழியாக செல்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது. இதன் காரணமாக சாலைகளில் இருக்கும் குப்பைகளையும், புதர்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்வாய் அடைப்புகளை அகற்றுதல், காலி மது பாட்டில்களை சேகரித்தல், வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தேயிலை தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே பேரகனி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒரு சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கட்டப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு”…. பீதியில் குடும்பத்தினர்…. வனத்துறையினரின் முயற்சி…!!!

திடீரென வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகாலம் நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி பாம்புகள் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மசினகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பு வீட்டிற்குள் படமெடுத்து ஆடியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோடை மழை” பூத்துக்குலுங்கும் காபி செடிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

காபி செடிகள் பூத்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள செம்மனாரை, கரிக்கயூர், குஞ்சப்பனை, கீழ்தட்டபள்ளம், அரவேனு போன்ற கிராமங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காபி செடிகளை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். இங்கு ரொபஸ்டா மற்றும் அரபிக்கா என்ற 2 விதமான செடிகள் பயிரிடப்படுகிறது. இந்த செடிகளில் ஆண்டுக்கு 2 முறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு குடிநீர் வேண்டும்” அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!!

அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காத்துக்குளி‌ கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்மோட்டார் மூலம் 2 கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் அடிக்கடி பழுதடைவதால் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் கோத்தகிரியில் உள்ள பேரூராட்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் அத்துமீறிய “ஹெட் மாஸ்டர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்து மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் பறிமுதல்…. ஒருவர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் செல்வகுமார் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகளில் பையில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வகுமாரை கைது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோத்தகிரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.‌ இவர்கள் வ.உ.சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த கலெக்டர்….!!!

புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மறுநாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அங்காளம்மன், ஹெத்தையம்மன், பட்டத்தரசி அம்மன், ராஜகாளியம்மன், பவானி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ‌ நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே புகழ்பெற்ற சந்தைக்கடை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அம்மன் வீதி உலா போன்றவைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து நகரின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீர் ஆய்வு” உணவருந்திய கலெக்டர்…. மகிழ்ச்சியில் பழங்குடியின மாணவர்கள்….!!!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கார்க்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் உரையாடி கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை கூறினார். அதன்பின் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, சமையல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கிடைக்குமா?…. தவிக்கும் கிராம மக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அரவேனு – அளக்கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு  ஒற்றையடிப் பாதை வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பகுதிகள் கரடு முரடாக காணப்படுவதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இங்கு  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சேரும் சகதியுமாக காணப்பட்ட சாலை”…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

வேலை செய்து கொண்டிருந்த  தொழிலாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கல்லூர், ஓமக்குழி, செட்டியார் மட்டம், கவட்டை, கீழ்ஆடுபட்டு  மற்றும் மேல்ஆடுபட்டு பகுதிகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கோத்தகிரியில் இருந்து மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஜக்கனாரை பகுதியில் மழையின் காரணமாக சாலை பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வேண்டும். அதன்பிறகு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. “அகழிகள்” அமைத்துத் தாருங்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை”…. மீண்டும் பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தொடர் மழையின் காரணமாக வனப்பகுதி மீண்டும் பசுமையாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியது. தற்போது பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வனப்பகுதிகளில்  மீண்டும் புல் முளைத்து பசுமை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்…. மனுக்களை கொடுத்த பொதுமக்கள்…. உறுதியளித்த வருவாய் அதிகாரி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இதில் கலந்து கொண்ட சில மக்கள் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தனர். அதன்பிறகு சிலர் வீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“1969-ம் ஆண்டு” கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1969-ஆம் ஆண்டு முதல் படித்த அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன்பிறகு பழைய நண்பர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து உரையாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில்….. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுர் அருகே புகழ்பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் சேர்ந்து  நடத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…. திரளானோர் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், கரகம் பாலித்தல், அம்மனுக்கு சிறப்பு ஹோமம், யாகபூஜை, சிவஹோமம் போன்ற ஏராளமான பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்கள் பறவை காவடி, பூ காவடி போன்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டி…. சிறுத்தை கொன்றதா? புலி கொன்றதா?….. வனத்துறையினர் விசாரணை….!!

மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை வன விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகள் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. இவர் சிறிது நேரம் கழித்து மாடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது. இதை சிறுத்தை அல்லது புலி கடித்து கொன்று இருக்கலாம். இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்…. பொதுமக்கள் கோரிக்கை…..!!

கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் போன்றவை அமைந்துள்ளது. இதனால் உப்பட்டி, தொண்டியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி, கரியசோலை போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செல்கின்றனர். இது தவிர கேரளாவிற்கு செல்வதற்கும் பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதன் காரணமாக பந்தலூர் பகுதிக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டர் குடியிருப்பில் புகுந்த சிறுத்தை…. பீதியில் மக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!!

மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் சிறுத்தை புகுந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் நிறைந்திருப்பதால் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்கு தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. அழுகிய நிலையில் சடலமாக கிடந்த ஆண் யானை…. வனத்துறையினர் விசாரணை….!!

வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று சடலமாக கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர், சிங்காரா, மசினகுடி போன்ற வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், பிணந்தின்னி கழுகுகள், கரடிகள், மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பூக்குழி தடுப்பணை அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்தை நோக்கிச் சென்றனர். அப்போது அழுகிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. சிறப்பாக நடைபெற்ற திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரங்கோடு அருகே படச்சேரி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த வருடமும்  திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு ஆதிவாசி மக்கள் தங்களுடைய பழம்பெரும் நடனத்தை ஆடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானை….. 8 மாத குழந்தை உள்பட 2 பேருக்கு படுகாயம்….. பெரும் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் புகுந்து காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே புளியம்பாராவில் கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென ஒரு  காட்டுயானை புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த சிலரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது ஒரு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் கைக்குழந்தை உட்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆதிவாசி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூக்குண்டம் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் குண்டம் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே காந்திநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பூக்குழி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் பறவை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதன்பிறகு பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஊட்டியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகளின் கார் கூடலூர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா….. திரளான பக்தர்கள் தரிசனம்…..!!

பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி நொண்டிமேடு பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை  திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது‌. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி அருகே பொன்னூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அப்பர் என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பொன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் அப்பரின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் அப்பர் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை […]

Categories

Tech |