தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் […]
