நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]
