விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் மட்டம் உயரத்தை தொடர்ந்து கடல் போல் காட்சியளிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மேற்குத்தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பெரியார் அணையின் நீர் மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பிளவக்கல் பெரியாறு அணை தற்போது மிகவும் அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அணையில் மேல்மட்டத்தில் இருந்து பார்க்கும் போது கடல் போன்று காட்சியளிக்கின்றது. […]
