ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கனஅடி குறைந்தால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கன மழையால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த 19ஆம் தேதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து […]
