அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]
