இந்தோனேசியாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நீர்ச்சறுக்கு சரிந்து கீழே விழுந்ததைக் காட்டும் வீடியோவானது சமூகஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரிலுள்ள கெஞ்சரன் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்த கோர விபத்தில் 16 குழந்தைகள் படுகாயமடைந்தனர். நீர் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த சூழ்நிலையில் திடீரென்று அது உடைந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து பயணிகள் கீழே விழுந்தனர். இந்த கோர விபத்தில் 16 குழந்தைகள் படுகாயமடைந்தனர். […]
