திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமானது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், ஆறுகள், திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவை வாயிலாக பாசனம் செய்யப்படுகிறது. ஆகவே மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமானது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக சென்ற வருடம் 21 நாட்களில் 605 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து மழைக் காலத்தில் வீணாக ஓடும் மழைநீரை, […]
