தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். […]
