அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒன்றரை லட்சம் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் […]
