குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற 12 வயது சிறுவன் இருந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ் நீண்ட நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவரது பெற்றோர் சந்தோசை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கீழப்பூசாரிப்பட்டியில் இருக்கும் குளத்தின் கரையில் சந்தோசின் சைக்கிள் நின்றதை அவரது […]
